புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு


rbi-kerd-621x414livemintபுதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை தடுக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மத்திய அரசு கூறியது. உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டிசம்பர் 30-ந் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய 50, 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது. இப்புதிய 50 ரூபாய் நோட்டுகள் ‛L’ வரிசையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 

Leave a Response