ராம்சரண் – பிரியங்கா சோப்ரா நடிக்கும் “ சூப்பர் போலீஸ் “


img_1508ரிலைன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்  வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘சூப்பர் போலீஸ்’. தெலுங்கில் துஃபான் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை ARK.ராஜராஜா தமிழாக்கம் செய்துள்ளார்.

இப்படம் பற்றி ராஜராஜா கூறுகையில்,

“காக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து நேர்மையாக வாழ்பவர் ராம்சரண். அதனால் ஐந்தாண்டுகளில் 23 முறை ட்ரான்ஸ்பர் செய்யப் படுகிறார். 22 முறை உள்ளுர்களிலேயே டிரான்ஸ்பர் செயப்பட்ட ராம்சரண் 23 முறையாக மும்பைக்கு மாற்றம் செய்யப் படுகிறார்.

மும்பைக்கு இவர்  மாற்றலாகி வந்த உடனேயே கலெக்டர் ஒருவர் கொல்லப் படுகிறார். பதறிப்போன ராம்சரண்  அந்த படுகொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். ஆயில் மாபியா தலைவன் பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்று அறிந்து, அந்த கும்பலின் ஆணிவேரையே  பிடுங்கி எரியும் ஆக்ரோஷப் படமே இந்த ‘சூப்பர் போலீஸ்’.

படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் சூப்பர் போலீஸ். படத்தில் ஐந்து குத்துப் பாட்டுக்கள் என்பது இன்னொரு ப்ளஸ். படம் இம்மாதம் வெளியாகிறது.” என்று கூறினார்.


 

Leave a Response