டிசம்பர் 30-தில் வெளியாக இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள்


0f459371-f0d5-4360-bb49-084649441dedராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. இப்படத்தை ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சதீஷ் குமார் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில்,
“தமிழ் ரசிகர்களை பொறுத்த வரை  டிசம்பர் மாதம் என்றாலே  அது இசையின் மாதம் தான். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெறும் மார்கழி உட்சவம் இசை நிகழ்ச்சியே அதற்கு சிறந்த உதாரணம். எனவே தான் எங்கள் தரமணி படத்தின் பாடல்களை இந்த மாதத்தில் வெளியிட  நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
இதுவரை  யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த சிறந்த  பாடல்களுள்  மிக சிறந்த பாடல்களாக எங்களின் தரமணி இருக்கும். பாடல்களை கேட்ட பின் ரசிகர்கள் இதனை உறுதி செய்வார்கள். புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடுபவர்கள், ஐ  டி ஊழியர்கள். அந்த வகையில், தரமணி பாடல்கள் அவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும். ஆண் – பெண் உறவை மட்டுமின்றி,  ஐ டி ஊழியர்களின்   வாழ்க்கையையும் தரமணி திரைப்படம்   உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம். வழக்கம் போல ரசிகர்களின் கற்பனைகளை  கவர்ந்து இழுக்கும் யுவன்ஷங்கர் ராஜா – இயக்குநர் ராம் கூட்டணி, இந்த முறையும் அதனை முழுமையாக பூர்த்தி செய்யும்.” என்று கூறியுள்ளார்.


Leave a Response