பொங்கலுக்கு வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’

9f059c2e-bb5f-4d0e-8633-271d039bb08c

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, தற்போது ‘புரியாத புதிர்’ படத்தில் நடித்துள்ளார். ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் – ஜே சதிஷ் குமார் தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படம் விஜய் சேதுபதி-ஜே சதீஷ் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார் கூறுகையில்,

“விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்த்திருநாளை வரவேற்க ஒட்டுமொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் நிலையில்,  தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை. விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது. அதனை பொங்கலன்று வெளியாகும் எங்களின் ‘புரியாத புதிர் திரைப்படம் உறுதிப்படுத்தும். 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக ‘புரியாத புதிர்’ இருக்கும்.” என கூறியுள்ளார். ⁠⁠⁠


 

Leave a Response