லாரன்ஸ் நடிப்பில் ‘மன்னன்’ ரீமேக்


mannan_bபி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற “மன்னன்” திரைப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காகவுள்ளது.

தற்போது பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சிவலிங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து பி.வாசு இயக்கவிருக்கும் ‘மன்னன்’ ரீமேக்கில் மீண்டும் லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காமெடி வேடத்தில் நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் கதாநாயகிகள் போன்ற விவரங்களை விரைவில் அறிவிக்க படக்குழு தீர்மானித்துள்ளது.


 

Leave a Response