தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது


49492840தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதில் சங்கத்தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன் பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

தற்போது இவர்களின் பதவி காலம் வரும் ஜனவரியோடு முடிவடைகிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது


 

Leave a Response