’பைரவா’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியீடு

bairavaa-first-look-hdபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கிவிட்டதால் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 23ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ ரிலீஸ் விழாவாக இல்லாமல் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது. விஜ்ய் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக இசையமைத்திருப்பதனால் பைரவா பட பாடல்களுக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response