‛வர்தா’ புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்


cyclone-vardha-10-1481359295தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ‛வர்தா’ புயல் இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்க கூடும்.

இதன் காரணமாக இன்று மாலை தொடங்கி நாளை வரையில் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வர்தா புயல் தாக்கத்தை சமாளிக்க கப்பல்கள், விமானங்கள்  தயார் நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பு இடங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு தேவையான உணவு, மருந்துகள் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உடைகள், மருத்துவர்கள், ஓட்டுநர்கள், நீச்சல் குழுக்கல் என அனைத்தும் தயாராக உள்ளதாகவும் 1077 எண்ணில் என்நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

Leave a Response