வர்தா புயல் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது ; வானிலை ஆய்வு மையம்


cyclone-vardha-10-1481359295சென்னைக்கு மிக அருகில் நாளை ‘வர்தா’ புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ‛வர்தா’ புயல் இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை தொடங்கி நாளை வரையில் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். மேலும், மணிக்கு, 40 – 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்க கூடும். கரையை கடக்கும் போது 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


 

Leave a Response