நடிகர் ரஜினி தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் சந்திப்பு.


karuna-rajini-698-10-1481386030தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு திடீரென்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.

கடந்த ஒருவார சிகிச்சைக்குப்பின் உடல்நிலை நலம்பெற்று கடந்த 7-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.


 

Leave a Response