ரஜினியின் ’2.0’ படத்தில் சிரஞ்சீவி


rajini-chiru-danceசிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ’2.0’. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌சய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் வியாபரத்திற்கு தமிழில் ரஜினியும், இந்தியில் அக்சய் குமாரும் இருக்கும் நிலையில் தெலுங்கு வியாபாரத்திற்கு பிரபல நடிகர் யரேனும் இருந்தால் உதவியாக இருக்கும் என நடிகர் சிரஞ்சீவியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக இருந்த காலத்திலேலே, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடதக்கது.


 

Leave a Response