இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாபெறும் முற்றுகை போராட்டம்


img-20161210-wa0005இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹிம் அறிவிப்பு.

முதல்வர் கண் விழித்தார், முதல்வர் சாப்பிட்டார், முதல்வர் பேசுகிறார், முதல்வர் நடை பயிற்சி செய்கிறார், முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்க்கு செல்லலாம் என தினம் தினம் ஒரு அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை கடைசியில் முதல்வர் இறந்து விட்டார் என அறிக்கை வெளியிட்டது.

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்ததில் இருந்து மரணம் அடைந்த வரையிலான CCTV விடியோ, புகைப்பட ஆதாரங்களை மக்களுக்கு தெரிவிக்க கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக  திங்கள் கிழமை(12-12-16) மாலை 3-00 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை முன்பு மாபெறும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.

விடியோ , புகைப்பட ஆதாரங்களை மருத்துவமனை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response