திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்


j_sekharவருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் பல கோடிகலுடன் சிக்கிய சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான சேகர் ரெட்டி சென்னையில் வசித்து வருகிறார். இவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை (கான்டிராக்ட்) எடுத்துச் செய்வதில் முன்னணியில் இருந்து வருவதாகவும், அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. மணல் குவாரிகளில் மணல் அள்ளும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.

இவரது சென்னை மற்றும் வேலூர் வீடுகளிலும், இவரது உறவினர் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 127 கிலோ தங்கம், புதிய நோட்டுக்கள் உட்பட 100 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து வந்தார். வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு, அப்பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டியை நீக்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.


 

Leave a Response