ஜெயலலிதாவிற்கு நினைவு அஞ்சலி நிகழ்வு ; தென்னிந்திய நடிகர் சங்கம்


151018175915_nassar_640ஜெயலலிதாவிற்கு நினைவு அஞ்சலி நிகழ்வு நடத்த இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

அதில் ;-

நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வனைத்தும் அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என  அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


 

Leave a Response