ஆந்திரா அருகே உருவானது புயல்


giants_waves_2615087gதென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், ‛வார்தா’ புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்திற்கு, 1,060 கி.மீ., தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளதால், டிசம்பர் 11ம் தேதி முதல் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Leave a Response