வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவது இல்லை ; ஜீவா


jeeva-at-endrendrum-punnagai-movie-success-meet-5-largeஜீவா நடித்த ’கவலை வேண்டாம்’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் ஜீவாவின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை.

இதை பற்றி கூறிய ஜீவா, நான் இதுவரை 26 படங்களில் நடித்துள்ளேன், அதில் வெற்றி தோல்வி எத்தனை என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி கவலைப்படவும் மாட்டேன்.

நான் எனக்கு பிடித்ததை செய்துகொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமாவுக்கு நான் வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.

என்னை நடிகனாக்கியது, அமீர் இயக்கிய ‘ராம்’ படம்தான். அவர் மதுரைக்காரர். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்துவிட்டால் அதுவெற்றி என்பது எனது கணிப்பு என்றார்.


 

Leave a Response