இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 18 பேர் பலி


indonesia-earthquakeஇந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படட்து. 6.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் சரிந்து கீழே விழுந்ததில் இதுவரை சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர்.

அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி, கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது.

இந்தோனேசியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள மாவ்மேரே பகுதியில், இருந்து 130 கி.மீ தொலைவில் மையம் கொண்ட நிலநடுக்கம், கடல்மட்டத்திலிருந்து 524 அடி ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

Leave a Response