நடிகர், பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்


26lookபழம்பெரும் நடிகரும், முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், வழக்கறிஞரும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான திரு. “சோ” ராமசாமி இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் அதிகாலை 3.58 மணிக்கு மரணம் அடைந்தாா்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோ-விற்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

எம்ஆர்சி நகரில் உள்ள  இல்லத்தில் சோ உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. சோ-விற்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


 

Leave a Response