கரையை கடக்கும் புயல்கள் அதிகம் தாக்கும் என வானிலை நிபுணர் தகவல்


25-10-12-south-_th_1247269fஇந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை காலத்தில் கரையை கடக்கும் புயல்கள் அதிகம் தாக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இது குறித்து தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறியதாவது, தமிழகத்தில் வரும் வட கிழக்குப் பருவ மழை காலத்தில் கரையை கடக்கும் அதிகமான புயல்கள் தமிழகத்தை தாக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களை அதிகமான புயல்கள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. வழக்கமாக வடகிழக்குப் பருவ மழை காலத்தில் ஒரு சில புயல் சின்னங்கள் உருவாகும். ஆனால், அவை கரையைக் கடப்பதில்லை.

ஆனால், இந்த முறை கரையை கடக்கும் புயல்கள் அதிகம் உருவாவதற்கு சாதகமான சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு வடகிழக்கு பருவ மழை தான் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்தை ஏமாற்றிவிட்ட நிலையில், வடகிழக்குப் பருவ மழை பற்றிய தகவல்கள் தமிழகத்துக்கு போதிய நீரை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு வரமாக அமையும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகின்றனர்.


 

Leave a Response