எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது


1736115341திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது வழங்கப்பட உள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவிற்கான போஸ்டர் மற்றும் டிரைலர் இன்று புது தில்லியில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வழங்கப்பட உள்ளது.

விரைவில் நடைபெற இருக்கும் 47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று கூறினார்.

சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 1,032 திரைப்படங்கள் திரையிடப்படும். 1,032 திரைப்படங்களில் 88 நாடுகளைச் சேர்ந்த 192 திரைப்படங்கள் விழாவில் தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response