வசூலில் களைக்கட்டும் ‘காஷ்மோரா’:

kashmora-vasool_ocfm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 27ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியானது ‘காஷ்மோரா’ திரைப்படம். இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ரீதிவ்யா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.

மூன்று வருடங்களாக தயாரிப்பில் இருந்த ‘காஷ்மோரா’ மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியை அடைந்துள்ளன, ஆனால் ‘காஷ்மோரா’ படம் வெளியாகிய மூன்று நாட்களில் பெரும் வசூலை குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘காஷ்மோரா’ வசூலை பற்றி நாம் விசாரிக்கையில், நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பது மூன்று நாட்களில் மட்டும் சுமார் ரூ.34.75 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் ரூ.4.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.8 கோடி, மூன்றாம் நாள் ரூ.6 கோடி என மொத்தம் ரூ.18.5 கோடி முதல் மூன்று நாளில் வசூலித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் நாள் ரூ.4.5 கோடி, இரண்டாம் நாள் ரூ.3.5 கோடி, மூன்றாம் நாள் ரூ.3.5 கோடி என மொத்தம் ரூ.11.5 கோடி முதல் மூன்று நாளில் வசூலித்துள்ளது. அமெரிக்காவில்(USA) ரூ.1.5 கோடியும், துபாயில் ரூ.1 கோடியும், கேரளா & மற்ற இந்திய மாநிலங்களில் ரூ.1.5 கோடியும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வேறு சில நாடுகளில் மொத்தம் ரூ.75 லட்சம் என மொத்தமாக மூன்று நாட்களுக்கு ரூ.4.75 கோடி வசூலித்துள்ளது. இவை அனைத்து வசூளையும் மொத்தமாக கூட்டினால் முதல் மூன்று நாட்களின் ‘காஷ்மோரா’ வசூல் சுமார் ரூ.34.75 கோடி வசூலை ஈட்டியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பார்வையாளர் மத்தியில் ‘காஷ்மோரா’ படத்திற்கு கிடைத்துள்ள வெற்றி மற்றும் வசூல் மழையை கண்டு நடிகர் கார்த்தி, இயக்குனர் கோகுல், தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ்’ மற்றும் இப்படத்தை வெளியிட்ட ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ மிகுந்த சந்தோஷத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான ‘காஷ்மோரா’ படத்தை பார்த்தவர்களுக்கும் முழு திருப்தி, வசூலை குவித்த ‘காஷ்மோரா’ குழுவுக்கும் முழு திருப்தி. மொத்தத்தில் ‘காஷ்மோரா’ ஒரு வெற்றி திரைப்படமே.

Leave a Response