அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி


aymகவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம்  நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் எல்லாம் முன்னரே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . படம் எப்போது வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நவம்பர் 11-ந் தேதி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.


 

Leave a Response