போபால் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


bhopal_jail_prison_simi__1477888166953மத்திய பிரதேசம் போபால் மத்திய சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளையும் போபால் புறநகர பகுதியில் போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

போபால் மத்திய சிறையில் உள்ள சிறப்பு செல்லில் பல்வேறு பயங்கர குற்றச்செயல் புரிந்தவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் மத்திய-மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் சிமி இயக்கத்தினர் 8 பேர் இன்று அதிகாலை 4 மணிக்கு தப்பிக்க முயற்சித்துள்ளனர். இதனை பார்த்த தலைமை சிறை பாதுகாவலர் தடுக்க முற்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் காவலரின் கழுத்தை இரும்பு தட்டு மற்றும் டம்ப்ளரால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, துணியால் திரிக்கப்பட்ட கயிறு மூலம் மதில்சுவரில் ஏறி வெளியே குதித்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகளை பிடிக்க போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளும் போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீஸார் 8 சிமி தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர்.

சுட்டுக் கொள்ளப்பட்ட தீவிரவாதிகள் பெயர் பட்டியல்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜீத், முகம்மது அகீல், முகம்மது காலித் அகம்மது, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த முஜீப் ஷேக், மகாராஷட்டிராவை சேர்ந்த ஜாகீர் உசேன் சாதிக், மெகபூப் சேக், ஹம்ஷத் முகம்மது ஷாலிக்.


 

Leave a Response