இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் கவண்


kavan-movie-new-stills-2அயன்,மாற்றான்,கோ மற்றும் அனேகன் படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் கவண். இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.கவண் என்றால் ஒய் வடிவ மரக் கொம்பில் ரப்பர் கொண்டு செய்யப்படும் கல்லெறியும் கருவி. இதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்க்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியும் மடோனா செபஸ்டினும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தாயரிக்கிறது.

படத்தின் கதையை எழுத்தாளர் சுபாவும் வசனங்களை மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர்.

இன்னும் 10 சதவிகித படப்பிடிப்பே பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.


 

Leave a Response