ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்


rajnnikanthரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றிருக்கிறார். பரிசோதனை முடிந்ததும் ஓய்வு எடுத்து விட்டு ஓரீரு வாரங்களில் திரும்புவார் என எதிபர்க்கப்படுகிரது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ராணா படப்பிடிப்பின் போது உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு சிங்கப்பூரில் 40 நாட்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன் பிறகு கோச்சடையான், லிங்கா மற்றும் கபாலி ஆகிய படங்களில் நடித்து முடித்தார்.

பின்னர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் அவர் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பரிசோதனை முடிந்த பின் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என எதிபர்க்கப்படுகிரது.


 

Leave a Response