முதல்வர் செல்வி. ஜெயலலிதாவை சந்திக்க சென்ற ரஜினி..!

cc2d3315-0fdf-4dd8-8d60-a29441ac570e

முதல்வர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பல அரசியல் தலைவர்கள் பல பிரபலங்கள் அவரை விசாரித்த வண்ணம் உள்ளனர். நேற்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷூம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களை காண அவர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து அவரின் உடல் நிலையை பற்றி விசாரித்துள்ளார்.ஆனால், அவர் காரில் மருத்துவமனையின் உள்ளே சென்றதை யாரும் பார்க்கவில்லை. வெளியே வரும்போது தான் ரஜினிகாந்த் காரில் இருப்பதை வெளியே நின்றவர்கள் பார்த்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் டாக்டர்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாராம்.

Leave a Response