எஸ்.ஏ.சந்திரசேகர் கீழே விழுந்து காயம் : தந்தையை சந்திக்க‌ விரைகிறார் நடிகர் விஜய்

Vijay-with-father-SA-Chandrasekar

தமிழ் சினிமாவில் பல நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவர் நடிகர் விஜயின் தந்தை ஆவார். இவர் சமீபத்தில் கேரளா சென்ற அவர், குமரகோமில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது அறையில் வழக்கி கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதில் அவரின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, நடிகர் விஜய் அவரை சந்திப்பதற்காக இன்று கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response