கதாபாத்திரமாகவே வாழ்ந்த S.J.சூர்யா…”இறைவி” திரைப்பட விமர்சனம்:

Iraivi Review
நடிகர்கள்: அருளாக S.J.சூர்யா, மைகேலாக விஜய் சேதுபதி, ஜெகனாக பாபி சிம்ஹா, யாழினியாக கமாலினி முகர்ஜி, பொன்னியாக அஞ்சலி, மலராக பூஜா தேவாரியா, தாஸாக ராதாரவி, ரமேஷாக கருணாகரன், ஜானாக சீனு மோகன், மீனாட்சியாக வடிவுக்கரசி, மணிமேகலையாக இருதயம் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பு – C.V.குமார், K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபினேஷ் இளங்கோவன், இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன், பாடல்கள் – முத்தமிழ், விவேக், மணி அமுதவன்.

“இறைவி”. – முதல் 2 படங்களை மனசுல வச்சு வந்தா வருத்தப்பட்டு பிறகு ஆஹா இந்த டைரக்டர் செம…செமயா ஒரு படத்தை தந்துட்டார்னு பாராட்டுவீங்க..

S J. சூர்யா நடிகராக “அருள்” கேரக்டரில் தன்வாழ்க்கை(நிஜமாவே அரசியல் விளம்பரமில்லை) வாழ்ந்திருக்கிறார். அவரின் உடன் பிறவா தம்பியாக அவருக்காக எதையும் செய்யும் கேரக்டரில் விஜயசேதுபதி, அருள் தம்பியாக ஜெகன்(பாபி சிம்ஹா) இந்த கால தீர்த்த இளசு, இந்த மூன்று ஆண்கள்., அருள், மணைவி, அருள் மகள், மைக்கேல் தோழியாக பூஜா., மணைவியாக அஞ்சலி இப்படி பல கேரக்டர்கள்.

பூஜா கேரக்டர் யம்மாடி இப்படி ஒரு பெண்ணா? நடிப்பு, அமர்க்களம். தன் படுக்கை தோழனை விருப்பமின்றி விரட்டும் காட்சியில் நடிப்பு ஆஹா அற்புதம். ஒரு படம் இயக்கிய அருள் அது ரிலிசாகாத காரணமாக அவரின் வலி, தம்பிகளின் பாசம், கனவுகளோடு மைக்கேலை திருமணம் செய்துகொண்ட அஞ்சலியின் நிலை என்ன? அருள் விரக்தியால் வாழ்க்கை வசந்த்ததை இழக்க அதனால் அவன் மணைவி “கமாலினி முகர்ஜி” நிலை என்ன என்பதை சிறப்பாக ஒரு சினிமாவாக தந்த டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

“மணைவி”கள் “இறைவி” களாக வாழ்கிறார்கள் என்ற கருத்தினை கமர்சியல், கண்கள் கல்ங்க வைக்கும் சில காட்சிகளுடன் “இறைவி” பாடல்கள் அருமை “ஒத்தையில” பாட்டு மிக மிக அருமை இயக்குனர் அருளின் தந்தையாக நடிகவேள் ராதாராவி அவர்கள் சிறப்பான தோற்றம். மைக்கேலின் சித்தப்பா “தாஸ்” உருகவைக்கிறார். S J சூர்யா கிளைமாக்ஸ் காட்சியில் செல்போனில் பேசும் வசனத்துக்கேற்ப நடிக்க முடியாமல் தவித்து நடிப்பது அவ்வளவு அழகு, விஜயசேதுபதி யதார்த்த நண்பன்.

பெண்களில் முதலிடம் பூஜாவுக்கே, அடுத்து அஞ்சலி, பிறகு கமாலினி முகர்ஜி். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு ஒரு அழகோவியம். சந்தோஷ் நாராயணனின் பாடல்களின் இசை மற்றும் பின்னணி இசை படத்துக்கு இன்னொரு பெரிய பலம். “இறைவி” பல கோடி “இறைவிகளால் போற்றப்படப்போகிற படம்..பலருக்கு பாடம்..”.

விமர்சனம் – பூரி ஜெகன்.

Leave a Response