“மருது” திரைப்பட விமர்சனம்:

Marudhu Review
நடிகர்கள்: விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி, ராதாரவி, R.K.சுரேஷ்,மாரிமுத்து, ஆதிரா பாண்டியலக்ஷ்மி, கொள்ளபுலி லீலா.

தொழில்நுட்ப கலைஞர்கள்: கதை, திரைகதை, வசனம், இயக்கம் – முத்தையா, ஒளிப்பதிவு – வேல்ராஜ்.R, இசை – D.இமான், படத்தொகுப்பு – பிரவீன்.K.L., பாடல்கள் – வைரமுத்து மற்றும் யுகபாரதி, தயாரிப்பு – கோப்புரம் பிலிம்ஸ் சார்பாக G.N.அன்புச்செழியன்.

“மருது”. விஷால் நடித்த படங்களில் மிக மிக முக்கியமான படமாக மாறும். இன்னா ஏக்‌ஷன், இன்னா சென்ட்டிமென்ட், இன்னா லவ், எல்லாம் சரியாக கலந்து தந்த டைரக்டரை பாராட்ட தவறவிடக்கூடாது.
“அப்பாத்தா” பாட்டி மீது உயிருக்கும் மேலாக பாசம் வைத்த பேரன், அவனுடன் ஒரு நண்பன், மணைவியை கொன்றவனுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர தவிக்கும் அப்பா, அவருடைய செல்ல மகள் ஸ்ரீதிவ்யா(பாக்கியம்). இந்த இரண்டு குடும்பம் எப்படி ஒன்று சேர்கிறது, கொலை செய்தவனை “மருது” எப்படி தண்டிக்கிறான் என்பதை, வீரம், காதல் பாசம், சிநேகம் என கலந்து கமர்சியல் படமாக “மருது”.

பாக்கியத்தை பார்த்த நிமிடங்கள் ஏதோ ஒரு கோவத்தில் வயது வித்தியாசமின்றி கடை ஒன்றில் “பளார்” “பளார்” என்று அறைய, அதுக்கடுத்த காட்சிகளிலிருந்து அப்பத்தா பேரனிடம் அந்த பாக்கியம் தான் உன் ஜோடி, அவளை லவ் செய் என்று விரட்ட, ஒரு கட்டத்தில் அதன் உண்மை காரணத்தை அறியும்போது ஹீரோ மட்டும் ஷாக் ஆகாமல் நமக்கும் திக் திக்! இயக்குனர் திரைக்கதையில் சரியான முடிச்சுகளை போட்டு சரியான இடத்துல் அவிழ்ப்பது பலே!! வில்லனாக R.K.சுரேஷ்(ரோலக்ஸ் பாண்டி) ஐய்யோ மாபாதகன் (டைரக்டர் இவ்வளவு வன்முறையை இந்த கேரக்டருக்கு வைத்த கோவம் என்னவோ?) பய பய முறுத்துகிறார்.

ராதாரவி பயில்வானாக(கேரக்டர் பெயர்) செம ஸ்கோர். சிலம்பு மங்கையாக வரும் பாக்கியத்தின் அம்மா மறைந்த ஒரு நிஜ கேரக்டரை(மதுரை லீலாவதி) ஞாபகப்படுத்திச் செல்வதை மறுக்கமுடியாது.

வசனங்கள் பல இடங்களில் கைதட்டல்களை அள்ளும். முதல் பாடலான “கருது” “மருது” வரிகள் செம மேட்சிங். ஆக தவறுகளை தட்டிக்கேட்பதால் விளைவு, அந்த விளைவுக்கு பிறகு நிகழும் நிகழ்வுகள், அரசியல் ஆதாயம் பெற வில்லனின் கோபம், அங்கே நிலவும் சூழ்ச்சி என பிரமாதமாக ஒரு கமர்ஷியல் படமாக “மருது” வெற்றி(வசூல்) உறுதி.

விமர்சனம்: பூரி ஜெகன்

Leave a Response