“தெறி” திரைப்பட விமர்சனம்:

Theri Review
நடிகர்கள்: விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நடிகை மீனா மகள் பேபி நைநிகா, ராதிகா, இயக்குனர் மகேந்திரன், பிரபு, அழகம் பெருமாள் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம்: அட்லி, இசை: ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ், படத்தொகுப்பு: அந்தோணி எல் ரூபன், தயாரிப்பு: “V கிரியேஷன்ஸ்” சார்பாக கலைபுலி எஸ் தாணு.

“தெறி” விஜய் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு பரிசாக குறிப்பாக “தீபாவளி” போல செம விருந்து.
தன் குழந்தையுடன் குழந்தையாகவே வாழும் ஒருவரின் பிளாஷ்பேக் கதையே “தெறி”. பேபி பேபி என மூச்சுக்கு மூச்சு பேசி வாழும் ஜோசப் என்ற ஒருவரின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு சம்பவமா? என அதிரவைக்கிறது “தெறி”. படத்தின் முதல் 20 நிமிடங்களை பேபி நைநிகா ஆக்கிரமித்து, ரசிகர்களை கவர்கிறார்.

குழந்தையிடம் அன்பாக பழகும் டீச்சராக எமிஜாக்சன். அடையாளம் தெரியாத அளவு மேக்கப், பிரமாதம். சிறிய தகராறு குழந்தையை அடிக்க வரும் ரௌடிகளை துவம்சம் செய்யும் காட்சி, அதே நேரத்தில் ஜோசப் யார் என்று எமி ஆராய்வது பரபரப்பு காட்சிகள். பிளாஷ்பேக்கில் அசிஸ்டன்ட் கமிஷனர் விஜய்குமார் ஐ.பி.எஸ் அதிரடி ஆரவாரம் செம செம கமர்சியல் கலக்கல். மகனுக்கு கல்யாணம் செய்துவைக்க ராதிகா படும் பாச போராட்டம், உடன் பிறவா சகோதரியை நாசமாக்கிய வில்லனின் மகனை தண்டிப்பதால் ஹீரோ வாழ்க்கையில் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள் திக் திக்.

சமந்தா சமத்தாக வந்து அசத்தி மனசுல நிற்கிறார். வில்லனாக இயக்குனர் மகேந்திரன் ஒயிட் & ஒயிட் உடையில் வில்லனாகவே வாழ்ந்துள்ளார். அமைதியாக இருந்து ஹீரோவை வேதனைபட வைப்பது அருமை. மொட்டை ராஜேந்திரன் கேரக்டரில் வாழ்கிறார்.

பேபி நைனிகா அழகு அழகு. அந்த மழலை பேசும் தமிழ், அழகோ அழகோ. நிச்சயம் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தை நினைவுக்கு வரவழைப்பது உறுதி. வம்பு வேண்டாம் என்று வாழும் “சாது” வை சீண்டினால் விளைவு என்ன படத்தின் முடிவு கச்சிதம்.

இசை, ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ்பாயின்ட். “தெறி” கோடை விடுமுறையை தியேட்டரில் கொண்டாட வைக்கிற படம் என்ற கருத்தில் ஐயமில்லை.

Leave a Response