மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும் நபர் சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் அல்ல – CEO சாய்பிரகாஷ் விளக்கம்:

Sairam Eng College CEO Saiprakash
சாய்ராம் பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருந்த த.அபிநாத் என்ற மாணவர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி கல்லுரி வளாகத்திலுள்ள கிணற்றில் குதித்து தற்கொளை செய்துகொண்டார். அபிநாத் தன்னுடைய 10ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்கு 464 பெற்று நல்ல படிப்பாளியாக இருந்தாலும் அவருக்கு மருத்துவத்துறையில் மிக்க ஆர்வம் கொண்டவர் என்று அவர், அவருடைய நண்பர்களிடமும் விரிவுரையாலர்களிடமும் தெரிவித்துள்ளதாக CEO சாய்பிரகாஷ் தெரிவித்தார்.

அபிநாத் தற்கொலை செய்துகொண்ட விஷயம் வெளிவந்தவுடன், அவர் கல்லூரியில் பணிபுரியும் பாலு மற்றும் தனுஷின் கண்டிப்பு மற்றும் தாக்குதலினால் தான் தற்கொலை செய்துகொண்டார் என சிலர் சமுகவளைத்தலங்களில் எழுதிக்கொண்டிருந்தனர். அபிநாத் தற்கொலையை கண்டித்து பல இடங்களில் மாணவர்களின் ஆர்பாட்டம் நடந்தது.

அபிநாத் தற்கொலை மற்றும் அதன் காரணமாக மாணவர்களின் ஆர்பாட்டம் குறித்து சாய்ராம் பொறியியல் கல்லூரியின் CEO சாய்பிரகாஷ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சாய்பிரகாஷ் கூறியதாது, அபிநாத் ஒரு நல்லொழுக்கம் மற்றும் படிப்பு திறன் கொண்ட மாணவர் என்றார். அவருக்கு மருத்துவத்துறையில் படிக்கவேண்டும் என்ற அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகவும், இயந்திரவியல் படிக்க தான் விரும்பவில்லை என்றும் தன்னுடைய சக மாணவர்களிடமும், விரிவுரையாலர்களிடமும் தெரிவித்துள்ளதாக தன்னிடம் அவர்கள் கூறினர் என்றார். தான் ஆசைப்பட்ட மருத்துவ கல்வியை பயில தன்னுடைய பெற்றோர்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்தினால் அபிநாத், ஒரு முறை தன்னுடைய வீட்டில் தன்னுடைய கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக அவருடைய தாய் தெரிவித்ததாக தெரிவித்தார்.

கல்லூரி விடுதியில் பணியாற்றும் பாலு மற்றும் தனுஷ் ஆகிய இருவர் மாணவர்களை துன்புறுத்துவதாக மாணவர்கள் சமுகவளைத்தலங்கள் சொல்லிவருகின்றனர், சில ஊடகங்களிலும் தெரிவித்துள்ளனர்! இது உண்மையா? எதாவது நடவடிக்கை மேற்கொண்டீர்களா என கேள்வி எழுப்பினோம். அதற்கு பதில் அளித்த சாய்பிரகாஷ் கூறியதாவது, இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றார். தங்கள் கல்லூரி மாணவர்கள் மிக நல்லவர்கள் என்றும், அவர்களை கெளதம் என்பவர் தான் இக்கல்லூரியின் முன்னால் மாணவன் என்று குறிக்கொண்டு மாணவர்களை வேண்டுமென்று தவறான பாதையில் வழிவகுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்துகிறார். கெளதம் சாய்ராம் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் என்பது ஒரு அப்பட்டமான பொய் என்றார். கெளதம் சாய்ராம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார் என்றும், அவர் அப்போது போதை பொருள் வைத்திருந்த காரனத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார், சக மாணவி ஒருவரை அடித்துள்ளார் என்றார். இதை போல் பல தவறுகளை தன்னுடைய பாலிடெக்னிக் கல்வி காலத்தில் செய்த காரணத்தினால் அவர் அங்கிருந்து தன்னுடைய பாதி படிப்பிலேயே வெளியேற்றப்பட்டு மாற்று சான்று(TC) கொடுத்து அனுப்பப்பட்டுள்ளார். அன்று அங்கு பணியாற்றிய எங்கள் கல்லூரியை சார்ந்த பாலு அவர்கள் தான் கௌதம்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து கெளதம் மீது பல முறை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார் என்று சாய்பிரகாஷ் தெரிவித்தார்.

கௌதம்மிற்கு பாலு மீது உள்ள பழைய பகை காரணமாக தான் அபிநாத் தற்கொலையை, கெளதம் வேறுவிதமாக திசைத்திருப்ப முயற்சிக்கிறார் என்று சாய்பிரகாஷ் கெளதம் மீது குற்றம் சாட்டினார். கெளதம் மீது அன்று நடந்த விசாரணை ஊடகவியாலர்களுக்கு காணொளியாக காண்பிக்கப்பட்டது.

கல்லூரி வழக்கம் போல் மார்ச் 21ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்பட்டு மாணவர்களின் வருகையோடு கல்லூரி நன்றே செயல்படுவதாக சாய்ராம் பொறியியல் கல்லூரியின் CEO சாய்பிரகாஷ் தெரிவித்தார்.

Leave a Response