மிஸ்கின் இயக்கத்தில் 2008’ம் ஆண்டு வெளிவந்த “அஞ்சாதே” திரைப்படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபாக், மீண்டும் மிஸ்கின்’னுடன் “அஞ்சாதே 2” படத்தை தயாரிக்கிறார். படத்தயாரிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடந்துக்கொண்டு வருகிறது.
“அஞ்சாதே 2” படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தை பற்றிய முழ விவரம் அடங்கிய அதிகாரபூர்வ செய்தி இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.