காவல்துறையின் அட்டூழியம் என்று சொல்லும் “விசாரணை” திரைப்படம் – விமர்சனம்:

Visaranai Review
நடிகர்கர்: “அட்டகத்தி” தினேஷ், சமுத்திரகனி, “ஆடுகளம்” கிஷோர், “கயல்” ஆனந்தி, E.ராமதாஸ், “ஆடுகளம்” முருகதாஸ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் கலிஞர்கள்: இசை – G.V.பிரகாஷ், ஒளிப்பதிவு – ராமலிங்கம், படத்தொகுப்பு – T.E.கிஷோர், கலை – ஜாக்கி, சண்டைப்பயிற்சி – திலிப் சுப்ராயன், திரைக்கதை & இயக்கம் – வெற்றிமாறன். தயாரிப்பு – தனுஷ்.

கதை:

தமிழக கிராமங்களில் இருந்து ஆந்திராவிற்கு வேலை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றிய கதை. தினேஷ் தன்னுடைய கிராமத்து நண்பர்களுடன் ஆந்திரா மாநிலம் குண்டூரில் ஒரு பூங்காவில் தங்கிக்கொண்டு வருகிறார். தினேஷ் ஒரு மளிகை கடையில் பணிபுரிய மற்றவர்கள் வேறு பனி செய்கிறார்கள். சற்று காலதாமதமாக மளிகை கடையை திறக்கும் தினேஷை ஆந்திரா போலீசார் கைது செய்து செல்கின்றனர். தன்னுடைய நண்பர்களும் தன்னைப்போலவே கைது செயப்பட்டுள்ளனர் என்பதை தினேஷ் அறிகிறார். ஆந்திராவில் எங்கோ ஒரு பெரும்புள்ளியின் வீட்டில் நகைகளும், பணங்களும் களவு போனமைக்கு, அந்த வழக்கை முடித்து வைப்பதற்காக தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் பொய் வழக்கு போட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆந்திரா போலீசார், அப்பாவிகளை எவ்வாறு பொய் வழக்கு போட்டு கைது செய்து துன்புறுத்துகிறார்கள் என்று காட்சியாகப்பட்டுள்ளது நம்முடைய கண்களில் கண்ணீரையும், மனதில் ஆந்திரா காவல்துறை மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

கிஷோர் ஒரு பிரபல ஆடிட்டராக படத்தில் காட்டப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஒரு பெரிய ஊழல் வழக்கில் தமிழக காவல்துறை அவரை கைது செய்ய முயற்சிக்கிறது. இதை அறிந்த கிஷோர் குண்டூரில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைகிறார். அதே நேரத்தில் தினேஷ் மற்றும் நண்பர்களும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றனர். தினேஷ் மற்றும் நண்பர்களை தமிழக காவல்துறை அதிகாரியான சமுத்திரகனி, நீதிமன்றத்தில் நல்லவர்கள் என்று கூறி அவர்களை காப்பாற்றுகிறார். அவர்களும் சமுத்திரக்கனி வேண்டுகோளை ஏற்று கிஷோரை ஆந்திரா நீதிமன்றத்திலிருந்து கடத்தி சமுத்திரக்கனியிடம் ஒப்படைக்கின்றனர்.

தமிழகம் கொண்டுவரப்படும் கிஷோர் காவல்துறையினரால் என்ன செயப்படுகிறார், தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் நிலைமை என்ன ஆகின்றது என்பது தான் படத்தின் மீதி கடை.

கேள்விகள்: ஒட்டுமொத்த ஆந்திரா காவல்துறையை கெட்டவர்களாக காட்சியமைத்துள்ளது இப்படம். சென்னையில் தொடர்ந்து ATM கொள்ளை நடைபெற்று கொண்டிருந்த காலம், அப்போது வேளச்சேரியில் பிப்ரவரி 2012ம் ஆண்டு வட மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டு கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து பல லட்சம் ருபாய் கைப்பற்றப்பட்டது. சுட்டு கொல்லப்பட்டவர்கள் ATM கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று தமிழக காவல்துறையினரால் செய்தி வெளியிடப்பட்டது(இது உண்மை செய்தி). “விசாரணை” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு போலி என்கவுண்டர் காட்சி, வேளச்சேரியில் நடந்த என்கவுண்டர் ஒரு போலியான என்கவுண்டர் என்பதை மக்களுக்கு சொல்வதை போல் காட்சியாகப்பட்டுள்ளது. அதை போல் ஒரு முக்கியமான பிரமுகர் தமிழக காவல்துறையினரால் அடித்து கொள்ளப்பட்டு, அவர் அவருடைய வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை போல் காட்சியமைகப்பட்டுள்ளது. இத்தகைய காட்சிகளில் எல்லாம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள காவலர்கள் அனைவரும் கொடூரமானவர்கள், மனசாட்சி இல்லாதவர்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் ஆந்திரா காவல்துறையை இழிவுபடுத்தும் இப்படிப்பட்ட காட்சிகளை கொண்ட “விசாரணை” திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை குழு எவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது என்பது ஒரு கேள்வி குறி.

பாராட்டுக்கள்: காவல்துறையினரால், அப்பாவி மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது தத்ரூபமாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. G.V.குமாரின் இசை, கதையுடன் பக்கபலமாக பயணிக்கிறது. பார்வையாளர்கள், அடுத்து என்ன என என்னும் விதத்தில் T.E.கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலமின்றி இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனியின் போலிஸ் கெட்டப் எப்போதும் போல் பொருத்தம். குண்டூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நடித்தவரின் தேர்வு மற்றும் அவருடைய நடிப்பு பிரமாதம். தினேஷ் நண்பர்களாக வரும் அனைவரின் நடிப்பிலும் எதார்த்தம்.

குறைகள்: தினேஷ் நடிப்பில் இருக்கும் அந்த கண்சிமிட்டலும், தலை அசைதலும் எல்லா படத்திலும் ஒன்றை போலவே அமைந்துள்ளது. அவருடைய அந்த செய்கைகளை சற்று மாற்றினால், அவருடைய நடிப்பு நன்றாக பேசப்படலாம். ஆனந்தியின் கதாப்பாத்திரம் படத்திற்கு தேவையற்ற திணிப்பு. ஆந்திரா காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்கும் கிஷோர் கடத்தப்பட்டதற்கு ஆந்திரா காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, நம்பும்படியாக இல்லை.

Leave a Response