“சேதுபூமி” – திரைப்பட விமர்சனம்:

Sethubhoomi
நடிகர்கள்: தமன், சம்ஸ்கிருதி, சிங்கம்புலி, ராஜலிங்கம், ஜூனியர் பாலைய்யா, சேரன்ராஜ், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், தவசி.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை – வி.டி.பாரதி மற்றும் வி.டி.மோனிஷ், படத்தொகுப்பு – வி.விஜய், ஒளிப்பதிவு – எஸ்.முத்துராமலிங்கம், சண்டைப் பயிற்சி – நாக்கவுட் நந்தா, கலை – ஜெயசீலன், தயாரிப்பு – எம்.ஏ.ஹபீப், கதை,திரைக்கதை, வசனம் & இயக்கம் – ஏ,ஆர்.கேந்திரன் முனியசாமி.

கதை:
சின்ன வயசிலிருந்து வெளிநாடு செல்ல கனவுகளுடன் வாழும். ஹீரோ- விசா கிடைத்து போகும் நாளில் விதி வந்ததால் ஒரு பிரச்சனையில் சிக்கிவிட- அதிலிருந்து விடுபட்டாரா? இல்லையா?- என்ற கதையை அருமையாக,எளிமையாக காட்சிகளை கொண்ட படம்.

ஹீரோயின் சமஸ்கிரிதா- சமத்து. அப்பா மீது வைத்த பாசம் பல கதைகளில் பார்த்தாலும, இந்த படத்தில் தனித்துவமாக உள்ளது. சிங்கம் புலி காமெடி பல நொடிகள் ரசிக்க, சில நொடிகள் மறக்க வைக்கின்றன. பிரதான பாத்திரம், பாண்டி’யாக வரும் டைரக்டர் செம நடிப்பு- வீரம்- பாசம் இரண்டு உணர்ச்சிகளையும் சிறப்பாக தந்து மனதில் நிற்கிறார்.

வில்லன் யாரென்ற சஸ்பென்ஸ் பரபரப்பாக உள்ளது. போலிஸ் அதிகாரியாக வரும் நடிகர் இன்னமும் மெனகெட்டு பயமுறுத்தியிருக்கலாம். நம்மூரு கூல்டிரிங்கஸ் பாட்டில்களை வெளியில் வைத்து விற்க சொல்லும் பிரச்சாரம் பாராட்டுக்குரியது. கிளைமாக்ஸ் பைட் மிரட்டலாக உள்ளது.

மொத்தத்தில் “சேதுபூமி” படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.

Leave a Response