“இறுதிச் சுற்று” திரைப்பட விமர்சனம்:

Irudhi Suttru Movie Still
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
மாதவன் கதையின் நாயகனாக, புதுமுகங்கள் ரித்திகா சிங் மற்றும் மும்தாஜ் சொர்க்கார் ஆகிய இரு உண்மையான குத்துசண்டை வீரர்கள் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் ராதா ரவி, நாசர், ஜாகிர் ஹுசைன், பால்ஜிந்தர் கவுர் ஷர்மா, காளி வெங்கட், பிபின் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை சுவகுமார் விஜயன் கையாள, சதீஷ் சூரியா படத்தொகுப்பை செய்துள்ளார். சண்டை பயிற்சியை டாம் டெல்மர் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பாடல்களை விவேக் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளார். திரைகதையை சுதா கொங்காரா மற்றும் சுனந்தா ரகுநாதன் எழுத, அவர்களுக்கு உறுதுணையாக திரைக்கதையில் குடுதலாக மாதவன் பணியாற்றியுள்ளார். படத்தின் கதையை எழுதி இயகியுள்ளார் சுதா கொங்காரா. படைத்தை Y Not ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்தும், திருக்குமார் என்டர்டைன்மென்ட் சார்பாக சி.வி.குமாரும் இனைந்து தயாரித்துள்ளனர். இவர்களுடன் படத்தின் வெளியீட்டில் ஒட்டிகொண்டனர் யூ.டி.வி மோஷன் பிக்சர்ஸ்.

கதை:
மனைவியை பிரிந்து வாழும் ஒரு குத்துசண்டை பயிற்சியாளர் தான் நம்ம கதையின் நாயகன் மாதவன். இவர் “அகில இந்திய குத்துச்சண்டை கழகத்தின்” பயிற்சியாளராக படத்தில் இடம்பெருகிறார். இவருடை மாமனார் ராதாரவி அந்த சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளவர், மாதவனுக்கு துணையாக நிற்பவரும் கூட. இவருடைய ஓடிப்போன மகள் தான் மாதவனின் மனைவி. பயிற்சியாளர் மாதவன் மீது பொம்பளை பொறுக்கி என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. முன் விரோதம் காரணமாக மாதவனுக்கும் அந்த சங்க தலைவருக்கும் இடையில் பகை. ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் என்னும் ஊரில் பயிற்சியாளராக பணியாற்றும் மாதவன் பாலியல் சம்பந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டால் சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்.

சென்னையில் ஒரு மீன் வியாபாரி குடும்பத்தில் மகள்களாக பிறந்தவர்கள் தான் கதையின் நாயகிகள் ரித்திகா சிங்(தங்கையாக), மும்தாஜ் சொர்க்கார்(அக்காவாக). சென்னையில் குத்துச்சண்டை பயிற்சியாளர் நாசரிடம் பயிற்சி பெறுகிறார் மும்தாஜ் சொர்க்கார். ஒரு கட்டத்தில் மும்தாஜுக்கு குத்துச்சண்டை போட்டியில் வெற்றி நிராகரிக்கபடுகிறது. அப்போது அடி தடியில் இறங்குகிறார் தங்கை ரித்திகா சிங். ரிதிகாவின் குத்துச்சண்டை திறமையை பார்த்த மாதவன் அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார். பின்னர் டெல்லிக்கு குத்துச்சண்டை போட்டிக்கு அக்கா, தங்கை இருவரையும் அழைத்து செல்கிறார்.

போட்டியில் அக்கா, தங்கை வெற்றி பெறுகிறார்களா அல்லது தோல்வி அடைகிறார்களா என்பது தான் கதை.

மாதவனுக்கு, குத்துச்சண்டை பயிற்சியாளர் கதாபாத்திரம் அழகாக பொருந்தியுள்ளது. ரித்திக்கா வடமாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமுக நடிகையாக இருந்தாலும் நடிப்பில் பிச்சி ஒதுரியுள்ளார். யதார்த்தமான நடிப்பு, அழகிய தோற்றம், சுட்டியான முகபாவனை, அழகான நடனம் என அணைத்து அமசங்களையும் கொண்டவர் தான் கதையின் நாயகி ரித்திகா சிங். அக்காவாக நடிக்கும் மும்தாஜ் சொர்க்கார் புதுமுக நடிகையாக இருந்தாலும் நடிப்பில் யதார்த்தம். நாசர் சென்னை குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் கதாபாத்திரம். வடசென்னை பாஷையை நன்றாக பேசியுள்ளார். அவர் நடிப்பை பற்றி விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. எப்போதும் போல் நல்ல நடிப்பு. அதை போல தான் ராதா ரவியின் நடிப்பும். அகில இந்திய குத்துச்சண்டை கழகத்தின் தலைவராக வரும் ஜாகிர் ஹுசைன் தான் படத்தின் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்றுள்ளார். இவர் தமிழுக்கு புதுசு, ஆனால் நடிப்பில் அமைதியாக கலக்குகிறார். அணைத்து நடிகர்களின் தேர்வும் சபாஷ்! சரியானது!!

படத்தின் கதையை அழாகா கற்பனை செய்துள்ளார் இயக்குனர் சுதா கொங்காரா. திரைகதையை இயக்குனரும் அவருடன் சுனந்தா ரகுநாதனும் இனைந்து எழுதியுள்ளனர். இவர்களுக்கு திரைகதை எழுதுவதில் உறுதுணையாக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் மாதவன். அருண் மாதீஸ்வரனின் வசனம், படத்தை ஒரு நிஜ வாழ்கையை போல் கொண்டு செல்கிறது. படத்திற்கு வசனம் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. விவேக் மற்றும் முத்தமிழின் பாடல் வரிகள் அழகிய வார்த்தைகளை கொண்டுள்ளது.சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி பிரமாதம். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வசனங்களுக்கும், இசைக்கும் பொருத்தமாக பயணிக்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பங்காற்றியுள்ளது. மாதவன், கதாநாயகி ரித்திக்கா சிங்கிற்கு தனக்கு நிகரான காட்சிகளை பகிர்ந்துள்ளமைக்கு அவரை மனதார பாராட்டலாம்.

இதே “இறுதிச் சுற்று” ஹிந்தியிலும் “சால காதூஸ்” என்ற பெயரில் ஒன்றாகவே வெளியாகிறது. இயக்குனர் சுதா கொங்காரா ஒரு நல்ல இயக்குனர் என்று தமிழிலும் சரி, ஹிந்தியிலும் சரி பேசப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ரித்திகா சிங்கிற்கு அணைத்து மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வர வாய்ப்புகள் அதிகம். மாதவன் மீண்டும் தமிழ் திரையுலகில் தன்னை ஒரு நல்ல நடிகன் என்று பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் படத்தை அணைத்து தரப்பினரும் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.

Leave a Response