பறிக்கப்படுகிறதா பிரியதர்ஷனுக்கு வழங்கப்பட்ட “பத்மஸ்ரீ” விருது? கிரிமினல் நடவடிக்கை பாயுமா?

Priyadarshan
2012’ம் ஆண்டு திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷனுக்கு இந்திய நாட்டின் கவுரவம் மிக்க விருதுகளில் ஒன்றான “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் கவுரவு மிக்க விருதுகளான பத்ம விருதுகள் மற்றும் இதர விருதுகள் பெறுவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆவணங்கள் சமர்பித்ததில் இயக்குனர் பிரியதர்ஷன் சில போலி ஆவணங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் சமர்பித்துள்ளதாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வாளர் ஜோமன் புதன்புராக்கள் என்பவர் இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களிடம் டிசம்பர் 12, 2015 அன்று எழுத்து மூலமாக புகார் செய்துள்ளார்.

ஜோமன் அவர்கள் பிரதமரிடம் ஆங்கிலத்தில் அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய குற்றசாட்டுகள் தமிழில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

1. பிரியதர்ஷன் அவர்கள் கேரள அரசாங்கமிடம் சமர்பித்த ஆவணத்தில் தான் “ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்” என்னும் உலக புகழ்ப்பெற்ற தொழுநோய் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை பற்றி தான் தீவிர ஆய்வு செய்தமையில் பிரியதர்ஷன் அப்படிப்பட்ட பொறுப்பை அவர் வகிக்கவில்லை. அந்த தொண்டு நிறுவனத்தின் இயக்குனர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் பெயர்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. பிரியதர்ஷன் கவுரவம் மிக்க “பத்மஸ்ரீ” விருதை பெறுவதற்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

2. பிரியதர்ஷன் தான் 2000’ம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அதை பற்றி விசாரித்தமையில், பி.வி.கங்காதரன் அவர்கள் தயாரித்த “சாந்தம்” என்ற திரைப்படத்தை இயக்கிய ஜெயராஜ் என்பவருக்கு அந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரியதர்ஷன் அவர்கள் சுப்கேசுப்கே, மாளாமல் வீக்லி மற்றும் ஹெதிராகர்ஹெமிராகர் ஆகிய படங்களின் கதைக்கு உரிமைகோரியுள்ளார், ஆனால் அவை சில மலையாளம் மற்றும் ஆங்கில படங்களின் ஹிந்தி ரீமேக். அந்த கதைகளுக்கான நன்மதிப்பு அந்த அந்த தனிப்பட்ட நபர்களுக்கு சேரவேண்டும். பிரியதர்ஷனின் இந்த செயல் “பத்மஸ்ரீ” பெறவேண்டிய உண்மையான கலைஞனை எவ்வாறு நசுக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. இந்த விருது வழங்கும் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு பிரியதர்ஷன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

3. 2011’ம் ஆண்டின் இந்திய முன்னணி 10 இயக்குனர்களில் தானும் ஒருவர் என பிரியதர்ஷன் தான் சமர்பித்துள்ள ஆவணங்களில் தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினத்தில் அத்தகைய அதிகாரப்பூர்வமான தரவரிசை படுத்தும் அமைப்பு இருந்ததில்லை. எனிவே பிரியதர்ஷன் கோரும் அந்த தரவரிசை போலியானது மற்றும் தான் அந்த கவுரவம் மிக்க விருதை பெறுவதற்காக தானே அதை தயார் செய்துள்ளார். பிரியதர்ஷனின் அன்றைய வெற்றி படமான “போள் புலையா”, மது அம்பட் எழுதி பாசில் இயக்கிய “மணிசித்ரதாழு” என்னும் மலையாள படத்தின் தழுவலே.

4. பிரியதர்ஷன் தனக்கு வழங்கப்பட்டுள்ள “பத்மஸ்ரீ” விருதை தன்னுடைய பெயருக்கு முன்பு சேர்த்துக்கொள்கிறார். அவ்வாறு அந்த பட்டத்தை ஒருவர் தன்னுடைய பெயருக்கு முன் சேர்த்துக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும். எனவே பிரியதர்ஷன் “பத்மஸ்ரீ” விருதை வைத்திருப்பதற்கு தகுதியற்றவராவார்.

5. பிரியதர்ஷன் போலியான ஆவணங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அரசாங்கத்திற்கு சமர்பித்து கவுரவம் மிக்க “பத்மஸ்ரீ” விருதை பெற்றுள்ளார். எனவே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள “பத்மஸ்ரீ” விருதை அரசு கைப்பற்றவேண்டும். போலி ஆவணங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அரசுக்கு சமர்பித்தமைக்காக பிரியதர்ஷன் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு ஜோமன் புதன்புராக்கள், பிரியதர்ஷன் மீது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளார்.

ஜோமன் புதன்புராக்கள் புகாரை ஏற்றுக்கொண்ட பிரதமர் அலுவலகம், புகாரை உள்துறை அமைச்சகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பியுள்ளது. ஜோமன் புதன்புராக்கள் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டால், இயக்குனர் பிரியதர்ஷனுக்கு 2012’ம் ஆண்டு இந்திய அரசு வழங்கிய “பத்மஸ்ரீ” விருது திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். அது மட்டுமின்றி பிரியதர்ஷன் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் இயக்குனர் பிரியதர்ஷன் போலி ஆவணங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமர்பித்திருந்தார் என்று கண்டறிந்தால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என்பதில் ஐயம் இல்லை.

ஒரு சிறந்த இயக்குனர் என்று மக்கள் மத்தியில் பேசப்படும் பிரியதர்ஷன் அவர்களுக்கு இந்த குறுக்கு வழி தேவைதானா என சினிமா பிரபலங்கள் முனுமுக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு பிரபல இயக்குனர், ஜோமன் புதன்புராக்கள் கூறுவதைப்போல் உண்மையில் போலி ஆவணங்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை அரசாங்கத்திற்கு சமர்பித்திருப்பாரா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

இந்த செய்திக்கு என்ன பதில் சொல்லப்போறார் இயக்குனர் பிரியதர்ஷன் என நாம் பொறுத்திருந்து பாப்போம்.

1

2

3

4

5

6

7

PM Modi reply Jomon

Leave a Response