மனைவியின் கனவை நனவாக்கிய செல்வராகவன்..!

selvaraghavan wife

மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது இதில் இயக்குநர் படத்தின் கதாசிரியர் செல்வ ராகவன், இயக்குநர் கீதாஞ்சலி செல்வ ராகவன், இசையமைப்பாளர் அம்ரித் ,ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், தயாரிப்பாளர் கோலா பாஸ்கர், படத்தின் நாயகன் பால கிருஷ்ண கோலா, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷரன் வால் மார்ட் பிலிம்ஸ் சாய், மற்றும் கஞ்சர்லா பார்த்தசாரதி ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர், படத்தின் கதாசிரியர் செல்வ ராகவன் அவர்கள் பேசியது , 15 வருடங்களுக்கு முன்னால் இங்கே இரண்டு அறிமுக இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அது நானும் என்னுடைய தம்பியும் நாயகனுமான தனுஷ் அவர்களும் தான். நீங்கள் தான் எங்களை பெற்றோருக்கு பின் கவனமாக வழிநடத்தி சென்றீர்கள். அதே போல் முதன் முறையாக படத்தை உருவாக்கி இருக்கும் இந்த குழுவுக்கு எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களை வழிநடத்தியது போல் இந்த மாலை நேரத்து மயக்கும் குழுவையும் வழிநடத்த வேண்டும். படத்தின் முதல் காப்பியை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு நிஜமாகவே இப்படம் புதுமையாக இருந்தது. நான் ஆண் இயக்குநராக இருந்து பெண்களின் உணர்வுகளை பற்றிய படத்தை இயக்கினேன். இப்படத்தில் பெண் இயக்குநராக இருந்து கீதாஞ்சலி ஆண்களை பற்றிய படத்தை இயக்கியுள்ளார். வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து கொண்டு படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி அவர்களை படபிடிப்பு தளத்துக்கு அனுப்புவது நிச்சயம் புதுவித அனுபவமாக தான் இருந்தது. அவர் படபிடிப்புக்கு சென்றாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குழந்தைகளை பற்றி விசாரித்து கொண்டே இருப்பார். இப்படத்தின் மூலம் நாயகன் பால கிருஷ்ணா கோலா, இசையமைப்பாளர் அம்ரித், ஆகியோரை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. படத்தின் தயாரிப்பாளர் எனக்காக மட்டுமே படத்தொகுப்பு செய்யவேண்டும் என்று மற்ற படங்கள் எதிலும் வேலை செய்யாமல் என்னுடனேயே பணியாற்றி பயணம் செய்து வந்தார். 7 ஜி படத்தில் இருந்து அவர் என்னுடன் வருகிறார். புதிய படைப்பாளிகளை நாம் வரவேற்ப்போம் என்றார்.

இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் அவர்கள் பேசியது , முதலில் நான் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய நம்பிக்கைக்கூறிய தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் அவர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. நாயகன் பால கிருஷ்ணா கோலா அவர்களை போன்ற ஸ்வீட் ஆனா நபரை நிச்சயம் நான் பார்த்தது இல்லை என்று சொல்லலாம். என்னுடைய வாழ்க்கையை மாற்றிய மூன்று விஷயங்கள் , முதலாவது நான் செல்வராகவன் சாரை பார்த்த தருணம் , இரண்டாவது குழந்தைகள் பிறந்த தருணம் மூன்றாவது இந்த படத்தை நான் இயக்கும் இந்த தருணம் . நானும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம், அப்போதே நாங்கள் இருவரும் ஒன்றாக இனைந்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம் . அந்த கனவு இப்போது நினைவாகி உள்ளது என்றார். இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன்.

படத்தின் தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் அவர்கள் பேசியது, நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக பயணித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தின் தலைவர் திரு. செல்வராகவன் அவர்கள். அவர்கள் தன்னுடைய கதையை கொடுத்து என்னுடைய மகனை நாயகனாக நடிக்க வைத்துள்ளார். படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அம்ரித் அவர்கள் சிறப்பாக கொடுத்தாளர். படத்துக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் கூறினார்.

Leave a Response