சந்தானத்திற்கு ஜோடியாக அதிதி பொஹன்கர் ஒப்பந்தம்


ஒட்ட்ரன்செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக அதிதி பொஹன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காமெடி படங்களில் நடித்து வந்த சந்தானம் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்கவுள்ளார். அதனால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


 

Leave a Response