பசங்க 2 படம் போல் வேறு எந்த படமும் இதுவரை வரவில்லை – பாண்டிராஜ்

pasanga 2

இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் பேசியது; வெகுநாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. இந்த கதையை உருவாக்க மிகப்பெரிய காலம் தேவைப்பட்டது. நான் இந்த கதையை உருவாக்க அதிக காலம் எடுத்து கொண்டேனா என்று எல்லோரும் கேட்கிறார்கள். நான் இந்த கதையில் கதையின் மாந்தர்களாக வரும் குழந்தைகள் பற்றி மிக நீண்ட ஆய்வு மேற்கொண்டேன் என்று கூறலாம். பசங்க2 படத்தின் கதையை என்னுடைய நண்பர் ஒருவர் தங்கள் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அவர்களை பற்றிய சில விஷயங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு, எ.டி.ஹைச்.டி என்னும் விஷயத்தை பற்றி ஆராய்ந்து கதையாக உருவாக்கினேன். அதை அப்படியே படமாக எடுத்தால் அது நிச்சயம் டாக்குமென்ட்ரி படம் போல் இருக்கும் ஆதலால் படத்தில் சில கமர்சியல் விஷயங்களை சேர்த்து படத்தை அழகாக எடுத்துள்ளேன். பசங்க2 படத்தின்; படபிடிப்புக்கு செல்லும் முன்னர் இதை போல் வேறேதும் படம் வந்துள்ளதா?? என்று ஹாலிவுட் படங்களை தேடி பிடித்து பார்த்தபோது அதை போல் ஒரு படம் கூட இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரியவந்தது. இப்படம் பள்ளிகளில் இருக்கும் போது தப்பு சத்தம் கேட்டவுடன் வகுப்பில் இருக்கிறோம் என்று கூட பார்க்காமல் ஆட்டம் போடும் குழந்தைகளை பற்றி பேசும். நான் குறிப்பிட்ட பத்து குழந்தைகளை தேர்ந்தெடுத்து கொண்டு அவர்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு கதையை உருவாக்கினேன். பசங்க முதல் பாகத்தை போன்றே பசங்க2 படத்திலும் நிச்சயம் ட்விஸ்ட் மற்றும் டர்ன்ஸ் ஏதும் இருக்காது. இப்படத்தின் மூலம் நான் சொல்ல நினைத்த கருத்து மக்களுக்கு போய் சேர வேண்டும் என்றால் நிச்சயம் கதைக்கு ஸ்டார் வேல்யூ கொண்டு ஒரு நாயகன் தேவை என்பதால் நான் தயாரிப்பாளரான சூர்யா அவர்களிடம் கேட்டேன் அவரும் நான் நிச்சயம் செய்கிறேன் என்று உடனே ஒத்துக்கொண்டு நடித்தார். சூர்யா சாரின் ரசிகர்களாக யாரும் படத்துக்கு வரவேண்டாம். அவரை நான் படத்தில் எல்லோரும் வியக்கும் அளவுக்கு நிஜமாகவே புதுமையாக காட்டியுள்ளேன். படத்தில் அமலா பால் அவர்களின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும், அவர் இந்த படத்தில் மருத்துவராக நடித்துள்ளார். மக்கள் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை , படம் முழுவதும் அனைவரும் சிரித்து கொண்டே இருப்பார்கள் என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.

படத்தின் ஒளிப்பதிவாளர் பாலா சுப்ரமணியம் அவர்கள் பேசியது, எனக்கு இப்படத்தை படமாக்குவது புதுமையான அனுபவமாக இருந்தது, நான் இப்படத்தை ரசித்து ரசித்து படம்பிடித்துள்ளேன். படத்தின் தீம் இசையை இயக்குநர் பாண்டிராஜ் என்னிடம் கொடுத்தபோது என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த தீம் இசைக்கு படத்தின் நாயகன் சூர்யா மைம் போன்று நடித்து காண்பிப்பார் என்னை அக்காட்சி மிகவும் பாதித்தது. நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என்றார் ஒளிப்பதிவாளர் பால சுப்ரமணியம்.

படத்தின் நாயகன் சூர்யா பேசியது, சமீபத்தில் கன மழையும் வெள்ளமும் நம்முடைய சென்னைக்கு புதிய ஒரு முகத்தை தந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த வெள்ளத்தின் மூலம் நம் கண்ணுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் தெரிந்தனர். எனக்கு இந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டதை பற்றி பேசுவதா அல்லது, பசங்க2 படத்தை பற்றி விரிவாக பேசுவதா என்று தெரியவில்லை. நான் பசங்க 2 படத்தின் கதையை வேறு ஒரு படபிடிப்பு தளத்தில் இருக்கும் போது தான் கேட்டேன். கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பல ஆண்டுகளாக இயக்குநர் பாண்டிராஜ் இந்த கதையோடு வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். அவர் இந்த கதையை உருவாக்க 3 முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார். நாம் நம்முடைய குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை இப்படம் வலியுறுத்தும். இந்த படம் உங்கள் அனைவரையும் கவனிக்க வைக்கும். படத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்த்தது படத்தின் கதைதான் என்பதில் மாற்றும் கருத்தே இல்லை. நான் இயக்குநரிடம் படத்துக்காக அவர் கொடுத்த கதையை அப்படியே எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஏன் என்றால் கதையில் அவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்ததது. ஆனால் இப்போது படம் 1/1/2 மணி நேர படமாக வந்துள்ளது. நிச்சயம் படம் அனைவரையும் கவரும். படத்தில் நடித்த அனைவருக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நாயகியாக நடித்துள்ள பிந்து மாதவி படபிடிப்பு தளத்தில் ஒரு நாள் கோலம் போட்டு கொண்டு இருந்தார், தீடிர் என்று பார்த்தால் கிளாப் அடித்து கொண்டு இருப்பார், இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் படத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போல் இருந்து வேலை செய்தார்கள் என்றார்.

Leave a Response