கபாலி சாங் லீக்; படக்குழு அதிர்ச்சி..!

kabali-song-leak

ரஜினி கபாலி படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றாலும் சென்றார், படத்தை பற்றிய தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் வெளியாகி கொண்டே இருக்கிறது. ரசிகர்களின் அன்பு தொல்லையை தட்டமுடியாத ரஜினி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றார். அடுத்த நிமிடமே புகைப்படத்தை பேஸ்புக், ட்விட்டரில் வெளியிட்டு விடுகின்றனர். இதனால் ரஜினி என்ன கெட்டப், என்ன உடை அணிகின்றார் என தெரிந்துவிடுகின்றது.

ஏர்போர்ட்டில் நடந்த படப்பிடிப்பு கூட வாட்ஸ்ஆப்பில் வெளியாகியது. மலேசியாவில் நடக்கும் படப்பிடிப்பு காட்சிகளும் அவ்வபோது இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் பாடல் காட்சியை படமாக்கும் போது, யாரோ ஒருவர் அந்த ஆடியோவை ரெக்கார்ட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் நடக்கும் சூழல்களை பார்த்தால் படப்பிடிப்பில் பணியாற்றிய நபர் தான் இதை வெளியிட்டுள்ளார் என தெளிவாக தெரிகின்றது.

பாடல் கேட்பதற்கு அருமையாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை பாடல் ஒலிக்கின்றது. ஆனால் படத்தை பற்றிய செய்திகள் இப்படி வெளியானால், ரசிகர்களிடையே சுவாரஸ்யம் குறைந்துவிடும் நிலையை ஏற்படுத்திவிடும். இதற்குமுன் ரஜினி படங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. இப்பொழுது உள்ள தொழிநுட்ப வளர்ச்சியில் தும்மினாலும், துப்பினாலும் கூட உடனே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. இப்படியே போனால் படம் வெளியாவதற்கு முன்னரே, முழுபடமும் இணையத்தில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனியாவது கபாலி படக்குழுவினர் சுதாரித்துக்கொள்வார்களா?

Satheesh Srini

Leave a Response