ரசிகர்களின் வயிற்றை புண்ணாக்கும் ரஜினி முருகன்..!

rajini-murugan-comedy-combo

சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ரஜினி முருகன். இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து இப்படத்தை டிசம்பர் 4 அன்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகின்றது. இப்படத்தை பற்றி படக்குழுவினர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல் பின்வருமாறு,

ரஜினிமுருகன் நிச்சயமாக குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படம். கரகாட்டக்காரன் போலவே படம் முழுவதுமே, ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றார்கள் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி. படத்தின் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக என்னம்மா இப்படி பண்றீங்களேமா பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இமானின் இசை, படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. எல்லா பிரச்சனையையும் சமாளித்து திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை உலகம் முழுவதும் டிசம்பர் 4 அன்று ரிலீஸ் செய்கின்றனர். அவர்களுக்கு இந்த படம் மீண்டும் ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும். படம் கேக் விற்பது போல எல்லா ஏரியாவிலும் விற்றுவிட்டது. தாமதமாக வந்தாலும், அனைவரின் எதிர்பார்ப்பும் ரஜினி முருகன் படத்தின் மீது அதிகரித்துள்ளது. நிச்சயம் இப்படம் அதை பூர்த்தி செய்யும் எனத்தெரிவித்துள்ளனர்.

Satheesh Srini

Leave a Response