திருட்டு ரயில் – ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..!

thiruttu rayil

கருணாநிதியின் குடும்ப வாரிசு ரக்ஷனின் முதல் படம் திருட்டு ரயில். கேத்தி என்ற புதுமுகம் ஹீரோயின். சென்ட்ராயான் மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜெயப்பிரகாஷ் இசை அமைத்துள்ளார். திருப்பதி இயக்கி உள்ளார்.

திருட்டு ரயில் படத்தை பற்றி இயக்குனர் திருப்பதி கூறியதாவது,

தூத்துக்குடியில் சிறிய பிரச்சனை ஏற்படுவதால், ரக்ஷன் மற்றும் அவரது நண்பர் சரண் செல்லம் இருவரும் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு புறப்படுகின்றனர். ஆனால் அவர்கள் ஏறும் ரயிலில் அதைவிட பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்து மீண்டு வருகிறார்கள் என்பதான் கதை. இது என் நண்பன் ஒருவன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. வருகிற 4ந் தேதி படம் வெளிவருகிறது எனக்கூறினார்.

Satheesh Srini

Leave a Response