புலி படத்தின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திய பி.டி.செல்வகுமார்

vijay-selvakumar

‘புலி’ படம் சென்ற மாதம் வெளிவந்தது. படம் ரிலீசுக்கு முந்தைய நாள் விடிய விடிய வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விஜய் வீடு மற்றும் அலுவலகம், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வீடு, கலைப்புலி s.தாணு அவர்களின் வீடு உட்பட சில இடங்களில் சோதனை நடந்தது. இந்த திடீர் சோதனையால் புலி படத்தின் பாக்கிதொகையை சம்பந்தப்பட்டவர்கள் யாராலும் செலுத்த முடியாமல்போனது. இதனால் படம் வெளிவருமா என அதிகாலை வரை மர்மமாகவே இருந்தது, பின்னர் ஒரு வழியாக 10 மணிக்கு மேல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. இது அனைவரும் அறிந்ததே.

புலி படம் வெளிவந்த பின்னர் படம் அசுர வெற்றி, அபார வெற்றி, வசூல் சாதனை, அம்பானி பாராட்டினார், ரஜினி மற்றும் லிங்குசாமி வாழ்த்தினர் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. தற்பொழுது புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் மற்றும் சிபு புலி படத்தின் மூலம் மறைக்கப்பட்ட பித்தலாட்டங்களை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி, தனக்கு இன்னும் கொடுக்கப்பட வேண்டிய சம்பளபாக்கி கொடுக்கவில்லை என புகார் கூறியதன் விளைவே பி.டி.செல்வகுமார் உண்மைகளை உளறக்காரணமாக அமைந்துவிட்டது.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமாக இருந்தாலும் படத்தில் நடிப்பதற்கு தனி சம்பளம், அந்த படத்தை பிற மொழிகளில் டப் செய்தால் அதற்கு தனி சம்பளம் என்பதே வழக்கமான நியதி. அதை சமந்தபட்ட நடிகர், நடிகை வேண்டாம் எனக்கூறினால் தான், கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீதேவி அதன் அடிப்படையில் தான் புகார் கூறினார். ஆனால் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக பேசிய 3கோடி கொடுக்கப்பட்டுவிட்டது. தெலுங்கில் டப்பிங் பேச நாங்கள் தனியாக சம்பளம் பேசவில்லை, ஸ்ரீதேவியின் கணவர் தான் பணம் தரவில்லையெனில் ஸ்ரீதேவி நடிக்கமாட்டார் என மிரட்டினார். எனவே அவர்களுக்கு பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டோம். தெலுங்கில் டப்பிங்பேச 15 லட்சமும், ஹிந்தியில் பேச ஹிந்தி சேட்டிலைட் உரிமையில் 20% (55 லட்சம்) விதம் போனிக்கபூரிடம் கொடுத்துவிட்டோம். முதலில் பேசியபடி அனைத்து பணத்தையும் கொடுத்து விட்டோம், அவர்களிடம் தான் எங்களுக்கு வரவேண்டிய 20 லட்சம் உள்ளது. ஹிந்தியில் ஸ்ரீதேவிக்கு மார்கெட் உள்ளது அங்கு வெளியிட்டால் படம் நன்றாக ஓடும் எனக்கூறினார். எனவே அங்கு ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து படத்தை வெளியிட்டோம். ஆனால் அங்கிருந்து ஒரு ரூபாய் கூட எங்களுக்கு வரவில்லை. மேலும் ஸ்ரீதேவி, அவருக்கு பிடித்த காஸ்டியும் டிசைனர்களை ஏற்பாடு செய்ததால் 50 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என பி.டி.செல்வகுமார் பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பி.டி.செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, படத்தை உரிய நேரத்தில் வெளியிடாமல் பல மாதங்கள் இயக்குனர் சிம்புதேவன் தாமதப்படுத்தியதாலும், டாக்ஸ் பிரி கிடைக்காததாலும் நஷ்டம் அதிகமானது. மேலும் படம் ரிலீஸ் சமயத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ததால் நெருக்கடிக்கு ஆளானோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நடந்துமுடிந்த பின்பு தான் புலி படம் வசூல் சாதனை என பி.டி.செல்வகுமார் தரப்பில் இருந்து விளம்பரப்படுத்தப்பட்டது. நஷ்டமான ஒரு படத்திற்கு லாபம் என விளம்பரப்படுத்தியது எதற்காக? மேலும் வருமானவரித்துறையினரின் சோதனையினால் நெருக்கடியில் உள்ளதாகவும், அதை புரிந்துகொண்டு எக்ஸ்ட்ராவாக கேட்டுக்கும் பணத்தை தரமுடியாத எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஸ்ரீதேவி புகாரை திரும்பபெற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் பி.டி.செல்வகுமார்.

வருமானவரித்துறையினர் சோதனையினால் பி.டி.செல்வகுமாருக்கு என்ன நெருக்கடி? இவர்கள் சரியாக வருமானவரி கட்டியிருந்தால் எந்த நெருக்கடியும் ஏற்படவாய்பில்லை. பி.டி.செல்வகுமார் கூறுவதை பார்த்தால் வருமானவரித்துறை சோதனையில் பலகோடி ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது போல் உள்ளது. அப்படி உண்மையிலேயே கஷ்டத்தில் இருந்தால், ஏன் புதியதாக இரண்டு படங்களை தயாரித்து வருகின்றார். உண்மையில் கஷ்டம் பி.டி.செல்வகுமாருக்கா? அல்லது புலி படத்தில் நடித்த விஜய் அவர்களுக்கா? விஜய் வீட்டில் இருந்து வருமானவரித்துறையினர் கருப்புபணம் கைப்பற்றியதாக கூறப்பட்ட செய்தியை விஜய் மறுத்தார். ஆனால் தற்பொழுது பி.டி.செல்வகுமார்  மற்றும் சிபு வருமானவரித்துறையினரால் நெருக்கடியில் உள்ளோம் எனக்கூறியுள்ளார். இதன் மூலம் புலி படத்தில் நடந்த பித்தலாட்ட குளறுபடிகள் அனைத்தும் தற்பொழுது வெளியாகி உள்ளன.

satheesh srini

Leave a Response