1பந்து 4ரன் 1விக்கெட் – விமர்சனம்

முதலில் இது கிரிக்கெட் படம் இல்லை என்பதை சொல்லிவிடுகிறோம்.. தெற்கே உள்ள நகரத்தில் இருந்து தனது காதலி ஹாசிகா தத்துடன் சென்னைக்கு தப்பி ஓடிவருகிறார் வினய் கிருஷ்ணா. அங்கே அவருக்கு, தான் வேலைபார்க்கும் கெஸ்ட் ஹவுசில் அடைக்கலம் கொடுத்து இரண்டு நாட்களில் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு தருகிறார் நண்பர் லொள்ளுசபா ஜீவா.

ஆனால் அந்த இரண்டு நாட்களில் ஹாசிகாவை பங்களாவில் இருக்கும் பேய் பிடிக்கிறது. அது வினய், ஜீவா இருவரையும் அடித்து துவைக்கிறது. பின் ஹாசிகாவை தேடிவரும் முறைமாமன் சென்றாயன் & கோவிற்கும், இவர்களை தேடிவரும் போலீசுக்கும் இதே ட்ரீட்மென்ட் தான்.

உள்ளே வரும் யாரையும் அந்த பங்களாவில் இருந்து வெளியேறவிடாமல் தடுக்கிறது பேய். கடைசியில் துணிவை வரவழைத்துக்கொண்டு பேயிடம் சென்று காரணம் கேட்க, தனது நிறைவேறாத ஆசை ஒன்றை நிறைவேற்ற சொல்லி கேட்கிறது அந்த பேய்.. அப்படி என்ன ஆசை.. அதை ஹீரோ நிறைவேற்றினாரா என்பது சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்..

இந்தப்படத்தில் தனித்தனியாக ஒவ்வொருவருடைய நடிப்பையும் விமர்சிக்க வேண்டியதில்லை.. திகில் படத்தில் காமெடியை கலந்து தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வீரா.. ஒரு பெண் பேயாக மாறுவதற்கான காரணமாக இதில் சொல்லப்படும் விஷயம் இதுவரை தமிழ் சினிமா, ஏன் உலக சினிமா கூட கண்டிராதது. அந்த சஸ்பென்சை படம் பார்த்து தெரிந்துகொண்டால் தான் கிக்..

(பி.கு : இன்னும் எத்தனை சோதனைகளைத்தான் தமிழ்சினிமா சந்திக்க போகிறதோ..?)