‘கப்பல்’ படத்தை ஷங்கர் வாங்கியது ஏன்..?

சின்ன பட்ஜெட் படமான ‘சதுரங்க வேட்டை’ நல்ல படம் என்று, படம் இயக்கிவரும் தயாரிப்பாளரும் சொன்னாலும் கூட, திருப்பதி பிரதர்ஸ் அந்த படத்தை வாங்கிய பின் தான் அந்தப்படத்திற்கான கலரே மாறியது. மார்க்கெட் வேல்யூவும் ஏறியது. லிங்குசாமியே வாங்கியிருக்கிறாரே என்கிற ஆர்வம் ரசிகர்களை தியேட்டருக்கு வர தூண்டியது..

அதேதான் இப்போது ‘கப்பல்’ படத்திற்கும் நடக்க இருக்கிறது. தனது சிஷ்யரான கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள ‘கப்பல்’ படத்தை தனது ‘எஸ்’ பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுகிறார் ஷங்கர்.. அதனால் சாதாரண கப்பல்’ இப்போது டைட்டானிக் ‘கப்பல்’ ரேஞ்சிற்கு கவனம் பெற்றிருக்கிறது.

படம் பற்றிய விஷயங்களை அவ்வப்போது ஷங்கரிடம் அப்டேட் பண்ணிக்கொண்டிருப்பாராம் காரத்திக். படம் முடிந்ததும் ஷங்கருக்கு போட்டுக்காட்ட, படம் பார்த்த ஷங்கரால் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை சிரிப்பை நிறுத்தவே முடியவில்லையாம். படம் பார்த்து முடிந்ததும் இரண்டு நாட்கள் கழித்து தானே படத்தை வெளியிடுவதாக சர்ப்ரைஸ் ஷாக் தந்தாராம் ஷங்கர்.

படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன் ஆகியோர் நடிக்க, இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன்.. மேலும் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஊருவிட்டு ஊருவந்து’ பாடலையும் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்களாம். மதன் கார்க்கி ‘காதல் கசாட்டா’ மற்றும் ‘ஒரு கப் ஆசிட்’ ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.