விஜய் சேதுபதி நல்லவர், ஆனால் உடன் இருப்பவர்கள் கெடுக்கிறார்கள் – ஸ்டுடியோ 9 சுரேஷ்:

நேற்று, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தன்னை ஸ்டுடியோ 9 சுரேஷ் மிரட்டுவதாக சொல்லியிருந்தார். அதை பற்றி அறிந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் பத்திரிக்கையாளர்களை அவரசமாக சந்தித்தார்.

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சுரேஷ், தான் விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தை வெளியிட்டதாகவும், அப்போதிலிருந்து விஜய் சேதுபதி மீது அவருக்கு ஈர்ப்பு வந்ததாகவும் தெரிவித்தார். ஜனவரி 10, 2013’ல் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து தான் அவரிடம் ரூ.9,00,000/ + ரூ.1,00,000 டி.டீ.எஸ். பிடிப்போடு சேர்த்து ரஸ்.10,00,000/= (ருபாய் பாத்து லட்சம்) முன்தொகையாக கொடுத்து “வசந்தகுமாரன்” என்ற திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். சுரேஷ் அவர்கள் விஜய் சேதுபதியிடம் டிசம்பர் 2013’ல் கால்சீட் கேட்டபோது, விஜய் சேதுபதி தான் தன்னுடைய குருநாதர் சீனு ராமசாமி இயக்கம் திரைப்படத்தில் நடித்து முடித்தப்பிறகு தான் ஸ்டுடியோ 9 கம்பெனியில் நடிப்பதாக தெரிவித்ததாக சொன்னதாக சுரேஷ் கூறினார்.

ஆனால் சுரேஷ், விஜய் சேதுபதியை பல முறை தொடர்புகொண்டபோதும் தான் ஸ்டுடியோ 9 கம்பெனிக்கு நடிக்க நடிப்பத்தை தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்தார் சுரேஷ்.

ஆனால் netru (நவம்பர் 13, 2014) விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் ஸ்டுடியோ 9 சுரேஷ் ஆகிய நான் அவரை மிரட்டி, தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார். “நாங்கள் ஒரு கார்பரேட் கம்பனியாக செயல்பட்டு வருகிறோம். இதோ இவர் தான் எங்கள் கம்பெனி சி.இ.ஒ நாசர். உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறோம். இவர் எம்.பி. அன்வர் ராஜா அவர்களின் மகன். எங்கள் கம்பனியில் என் நடிக்க மறுக்கிறார் என்று ஸ்டுடியோ 9 சார்பாக நாசர், விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். இதை விஜய் சேதுபதி அவரை நாங்கள் அரசியல்வாதிகளை வைத்து அவரை மிரட்டியதாக சொல்லியுள்ளார். விஜய் சேதுபதி மிக நல்லவர். எங்களுக்கு அவரை பற்றி நன்றாக தெரியும், அவரை அவருடன் இருக்கும் சிலர் அவரை குழப்பி அவரை இத்தகைய செயல்களில் ஈடுபட முயற்சிக்கின்றனர்” என சுரேஷ் நம்மிடம் கூறினார்.

இவளவு பிரச்னைக்கு அப்புறமும், விஜய் சேதுபதி உங்கள் படத்தில் நடிப்பார் என்று நினைகிறீர்களா? என கேட்டதற்கு! “சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் உடனடியா நடிக்க வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தவில்லை. நடிகர் தனுஷ் என்னுடைய நல்ல நண்பர். அவர் கேட்டு கொண்டாத்தின் பெயரில், விஜய் சேதுபதி தனுஷ் தயாரிப்பில் உருவாகும் “நாங்களும் ரௌடிதான்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு NOC வழங்கினோம். அதிலும் ஒரு வரி சேர்த்துள்ளோம், விஜய் சேதுபதி தங்களுடைய படத்தில் நடிக்க மறுத்தால் இந்த NOC செயல் இழந்து விடும்.”

“சில நாட்களுக்கு முன் விஜய் சேதுபதி, எங்கள் கம்பனி சி.இ.ஒ நாசர் மற்றும் நான் சென்னை தாஜ் ஹோட்டலில் சந்தித்தோம். அப்போது விஜய் சேதுபதி தான் பிசியாக உள்ளதாகவும் தன்னிடம் தற்போது கால்சீட் இல்லை என்றும் தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில் தான் ரூ.2,00,00,000/= (ருபாய் இரண்டு கோடி) காம்பென்செஷனாக கொடுபதாக தெரிவித்து. இரு வருடங்கள் கழித்து தான் இவர்கள் கம்பனிக்கு ஒரு திரைப்படம் செய்து கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். நாங்கள் அவரிடம் பணம் திருப்பி கொடு என்று கேட்கவில்லை, அவராக தான், “வசந்தகுமாரன்” திரைப்படத்திற்கு நீங்கள் முதற்கட்டமாக பல லட்சம் பணம் செலவு செய்துள்ளீர் என்று வருத்தப்பட்டார். ஆனால் இன்று இப்படி ஒரு பத்ரிக்கையரிக்கை வெளியிட்டுள்ளது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.” என்று ஸ்டுடியோ 9 சுரேஷ் பேசினார்.

இது சம்மந்தமான ஸ்டுடியோ 9 நிர்வாகம் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்துள்ளதாகவும், அவர்கள் மேற்கொள்ளபோகும் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஸ்டுடியோ 9 சுரேஷ் மற்றும் அவருடன் வந்திருந்த நாசர் தெரிவித்தனர்.

இந்த கால்சீட் மற்றும் பண பிரச்னை எப்போ முடிந்து “வசந்தகுமாரன்” திரைப்படம் ஸ்டுடியோ 9 நிர்வாகம் முலமாக படப்பிடிப்புக்கு செல்லப்போகுது, இல்ல வேற கம்பனியோட போகபோதானு அப்புறம் பாப்போம்.