என்ன.. ஒளிப்பதிவாளர் செழியன் இசைப்பள்ளி ஆரம்பிக்கிறாரா..?

ஓர் இசைப்பள்ளி தொடங்குவது ஒரு நூலகம் தொடங்குவதற்குச் சமம். பல மனநலக் காப்பகங்கள் மூடுவதற்குச் சமம் என்பார்கள். அதை வலியுறுத்தும் விதமாக தமிழ்சினிமாவில் ஒளிப்பதிவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த பிரபல ஒளிப்பதிவாளர் செழியன், ஓர் இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார்.

என்ன.. ஒளிப்பதிவாளர் இசைப்பள்ளி ஆரம்பிக்கிறாரா என ஆச்சர்யம் ஏற்படும்தான். ஆனால் ஒளிப்பதிவாளர் செழியனின் இன்னொரு முகம் பலரும் அறியாதது. ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ போன்ற பல படங்களில் தனது திறமையை நிரூபித்த, அவர் இசை தொடர்பாக இதுவரை 15 நூல்களை எழுதி இருக்கிறார் என்பது மகா ஆச்சர்யம் தான்.

இந்த இசைப்பள்ளிக்கான தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. பிரபல கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் இயக்குனர்கள் சீமான், பாலா, மிஷ்கின் பாடகர் மனோ, மற்றும் ஓவியர் மருது ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இந்த இசைப்பள்ளியை செழியனின் மனைவி நிர்வகிக்க இருக்கிறார்.. சென்னை, சாலிகிராமம், 111, துரையரசன் தெருவில், THE MUSIC SCHOOL என்ற பெயரில் இது தொடங்கப்பட்டுள்ளது.