இரும்பு குதிரை – விமர்சனம்

பைக் ரேசில் ஜெயித்து காதலியை மீட்கும் காதலனின் (உண்மை) கதைதான் இந்த இரும்பு குதிரை’.

சிக்னலை மதித்து பயந்து பயந்து வண்டி ஓட்டுபவர் அதர்வா.. அவர் காதலிக்கும் பிரியா ஆனந்துக்கோ சூப்பர் பைக்குகள் மீது ஆர்வம். அவருக்காக டுகாட்டி பைக் ஒன்றை செகண்ட் ஹேண்டில் வாங்கி பிரியாவுடன் ஜாலி ரைட் போகிறார் அதர்வா..

திடீரென ஒரு குரூப்பாக அவர்களை தங்களது சூப்பர் பைக்குகளில் சேஸ் செய்யும் ஒரு கும்பல் அதர்வாவை அடித்துப்போட்டுவிட்டு பிரியாவை கேரளாவில் உள்ள பாண்டிச்சேரியின் இன்னொரு பகுதியான மாகிக்கு கடத்துகிறது.

நண்பர்கள் உதவியுடன் தேடும்போது தன் காதலியை ஜானி ட்ரை நியூயன் தான் கடத்தி இருக்கிறார் என தெரியவருகிறது.. முடிந்தால் பைக்குடன் வந்து உன் காதலியை மீட்டுப்போ என சவால் விடுகிறார் ஜானி. காதலியை மீட்க வந்த அதர்வாவை பந்தயத்திற்கு அழைக்கிறார் ஜானி… பந்தயத்தில் ஜெயித்து காதலியை மீட்க, இறுதியில் எல்லாம் சுபம்..

பைக் ரேஸ், காதலி கடத்தல், ஹீரோவின் பைக் ரேஸ் ப்ளாஸ்பேக் இவற்றை வைத்துக்கொண்டு ஓரளவுக்கு சுவராஸ்யமாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ் போஸ்.. பிரியா ஆனந்தை இன்னும் எத்தனை படத்தில் தான் கடத்துவர்களோ தெரியவில்லை. இடைவேளைக்குப்பின் படம் வேகமெடுப்பது உண்மை. அதிலும் க்ளைமாக்ஸில் பத்து நிமிடம் அதீத விருவிறுப்பு..

ஜெகன், ராய்லட்சுமி, பைக்ரேஸ் என சாதகமான விஷயங்கள் இருப்பதால் நம்பி போகலாம்.. இந்த இரும்பு குதிரை உங்களை குப்புற கவிழ்க்காது.