மீண்டும் உதயநிதி ஜோடியானார் ஹன்ஷிகா..!

ஏற்கனவே ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் ஹிட்டான ஜோடிதானே மீண்டும் ஜோடி சேர்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே.. ‘என்றென்றும் புன்னகை’ படத்தை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனர் அஹமதுவின் அடுத்த படத்தில் தான் மீண்டும் உதயநிதி-ஹன்சிகா ஜோடி ஒன்று சேர்க்கிறது.

‘நண்பேன்டா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் உதயநிதி அதை முடித்துவிட்டு அக்டோபரில் இந்தப்படத்துக்குள் வருகிறார்.. ஹன்ஷிகா சொல்லவே வேண்டாம்.. வாலு, ரோமியோ ஜூலியட், மீகாமன் என பிசியாக இருந்தாலும் இந்தப்படத்திற்கு சிக்கலில்லாத வகையில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.