ரியல் எஸ்டேட் புரோக்கரானார் சிவகார்த்திகேயன்..!

தற்போது நடித்து வரும் ‘காவல்காரன்’ படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். வரும் ஆகஸ்ட்-16ஆம் தேதி படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.

இந்தப்படத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காக வேட்டி, சட்டை, கூலிங்கிளாஸ் கண்ணாடி என ஆளே மாற இருக்கிறார். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம். தயாரிக்கிறது. பிருத்விராஜுக்கு ஒரு ‘இந்தியன் ரூபி’ படம் மாதிரி சிவகார்த்திகேயனுக்கு இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் வேடம் அமையும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்க தகுந்த நடிகையாக தேடிக்கொண்டு இருக்கிறார்களாம். காரணம் அது சாதாரண கேரக்டர் இல்லையாம… தெருச்சண்டையில் டிகிரி வாங்கியவர் ரேஞ்சுக்கு சரியான சண்டைக்கோழி கேரக்டராம்.. யாரை செலக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலையே..?